அமெரிக்காவிற்கு இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியைப் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதை இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.
முன்னர் முன்மொழியப்பட்ட அதிகளவிலான வரிகளோடு ஒப்பிடுகையில் இந்த 10 சதவீத வரி விதிப்பானது கணிசமான சாதகமாக அமைந்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வரி விகிதம் காரணமாக பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா மற்றும் கம்போடியா போன்ற முக்கிய போட்டியாளா்களோடு இலங்கை சமமான நிலையை எட்டியுள்ளது.
குறிப்பாக ஆடைக் கைத்தொழில் போன்ற துறை சார்ந்த ஏற்றுமதிகளுக்கு இது மிகவும் முக்கியமானது எனவும் இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!