அமெரிக்க தடுப்பு முகாம்களில்மரணிக்கும் அகதிகள்!

அமெரிக்காவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமுலாக்கப் பிரிவின் தடுப்பு முகாம்களிலுள்ள கைதிகளின் மரண விகிதம் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 2025 ஜனவரியில் தனது தீவிரமான அகதிகள் வெளியேற்றப் பிரசாரத்தைத் தொடங்கியதன் பின்னரே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2009 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில், சராசரியாக 3,848 கைதிகளுக்கு ஒரு மரணம் என்ற விகிதத்திலேயே காணப்பட்டது.

டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு 1,630 பேருக்கு ஒருவர் என்ற வீதத்தில் மிக மோசமாக அதிகரித்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் தடுப்பு முகாம்களிலுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரியில் 70 ஆயிரமாக அதிகரித்திருந்தது.

ஜூன் மாத தொடக்க நிலவரப்படி சுமார் 50 பேர் இந்த முகாம்களில் உயிரிழந்துள்ளனர்.

இந்த மரணங்கள் குறித்து ஆய்வுசெய்த மருத்துவ வல்லுநர்கள், முகாம்களில் வழங்கப்படும் மருத்துவக் கவனிப்பு மற்றும் கண்காணிப்பு மிகவும் மோசமாக உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version