யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவருக்கும், வேலணை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் தூதரகத்தில் நேற்று(28) இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் இந்திய இழுவைப்படகுகளால் நயினாதீவு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,
நயினாதீவில் தற்சமயம் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூரியகல மின் உற்பத்தி தொடர்பான விடையங்கள் அதனுடன் தொடர்புடைய அபிவிருத்திகள் மற்றும் வேலணை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் வேலணை பிரதேச சபையின் உப தவிசாளர் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், நயினாதீவு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!