இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள்
தமது நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கையளித்தனர்.
அதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(20) இடம்பெற்றது.
அதற்கமைய, பப்புவா நியூ கினியாவின் உயர்ஸ்தானிகராக வின்சென்ட் சுமாலே நியமிக்கப்பட்டுள்ளார்.
சோமாலிய கூட்டாட்சி குடியரசின் தூதுவராக அப்துல்லாஹி முகமது ஒடோவாவும்,
லக்சம்பர்க் குடியரசின் தூதுவராக கிறிஸ்டியன் பீவெர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வத்திக்கான் நகரின் தூதுவராக மொன்சிக்னோர் ஆண்டரேஜ் ஜோஸ்வோவிட்டும்,
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் நய்யர் நசீரும்,
குவைத் நாட்டின் தூதுவராக சாலேஹ் முபாரக் அல் -சார்வியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!