தமிழ்நாடு – இராமநாதபுரம் – புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 91 லட்சம் ரூபா பெறுமதியான
7 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பொலிஸார் இன்று(18) சோதனை செய்தனர்.
அதனையடுத்து சிலர் தப்பிச் சென்றுள்ள நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது விட்டுச்சென்ற சிகரெட்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றுயுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் புதுமடம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் எனவும்,
சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!
கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!