இலங்கை விமானப்படைக்கு பத்து TH-57 (Bell 206 Sea Ranger) ரக ஹெலிகொப்டர்களை அமெரிக்கா இலவசமாக வழங்கவுள்ளது.
அனர்த்த நிலைமைகளில் பயன்படுத்துவதற்காகவே இந்த ஹெலிகொப்டர்கள் வழங்கப்படவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.


இந்த ஹெலிகொப்டர்களுக்காக அமெரிக்கா எந்தக் கட்டணத்தையும் வசூலிக்காது. ‘மேலதிக பாதுகாப்பு தளபாடங்கள் திட்டத்தின்’ (Excess Defense Articles Program – EDA) கீழ் இவை இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையிலிருந்து செல்லவுள்ள நிலையில் இத்தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!