இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தங்களும் கூடுதல் முதலீடுகளும் அவசியம் என, இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை விசாரிக்க சுயாதீனக் குழு நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்றுள்ள அவர், உயிரிழந்த 27 பேருக்கும், 100-க்கும் மேற்பட்ட காயமடைந்தோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசின் அடிப்படைக் கடமை என்றும், சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளுக்கு அமைய சிறைச்சாலை அமைப்பை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!