ஈரான் மீது இஸ்ரேல் இன்று(06) நடாத்திய தாக்குதலில், இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவுத்துறைப் பிரதானி மஜித் கஹதெமி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“அமெரிக்க-சியோனிச எதிரி” நடத்திய “பயங்கரவாதத் தாக்குதலில்” தனது உளவுத்துறை பிரதானி கொல்லப்பட்டதாக ஈரானியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான அமைதித் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!