அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தத்திலுள்ள 300 பில்லியன் டொலர் நிதியுதவித் திட்டம் அமெரிக்காவில் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் சுவிட்சர்லாந்தில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, போரால் பாதிக்கப்பட்ட ஈரானை மறுசீரமைப்பு செய்வதற்காக 300 பில்லியன் டொலர் மதிப்பிலான நிதித் திட்டம் ஒன்றை உருவாக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், இந்த அறிவிப்பு தற்போதைய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே, குறிப்பாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் இச்சூழலில், பெருந் தொகையை ஈரானுக்கு வழங்குவது முறையல்ல என அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் ஆகியோர், இந்த 300 பில்லியன் டொலர் நிதியானது அமெரிக்க வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து வழங்கப்படாதென தெளிவுபடுத்தியுள்ளனர்.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் தீக்கிரையானதில் 13 பணியாளர்கள் மீட்பு: மாலுமி மாயம்!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 103 பேர் மீட்பு: 140 பேரைக் காணவில்லை!
பிலிப்பைன்ஸ் தீ விபத்தில் பலியானவர் தொகை 35 ஆக உயர்வு!