ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரான் சர்ச்சைக்குரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும், மாறாக ஓமானுடன்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது.

மேலும், வர்த்தகக் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க அனுமதிக்கும் வகையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகத் தற்காலிகப் பாதை ஒன்றை அமைப்பது குறித்து உடன்பாட்டிற்கு வருவதற்காகவே ஓமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரானின் இந்த அறிக்கைக்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஈரானியத் தலைமை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு இரட்டை வேடம் போடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் எச்சரிக்கையால் பதற்றமடைந்த மத்திய கிழக்கு!
ரஷ்யா – உக்ரைன் தாக்குதலில் 9 பேர் பலி
உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ரஷ்ய அணுமின் நிலையத்தை மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!