ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடாத்தும் அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக மேலதிக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு ஈரானின் கடற்கரை பகுதிகளில் பல வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஈரான் மீதான இந்தத் தாக்குதல்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க மத்திய கட்டளை மையம், அண்மைக்காலமாக ஈரானால் முன்னெடுக்கப்பட்ட ‘நியாயமற்ற ஆக்கிரமிப்பு’ நடவடிக்கைகளுக்கு அந்த நாட்டைப் பொறுப்புக்கூற வைக்கவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

“முக்கிய சர்வதேச கடல்வழிப் பாதையில் சுதந்திரமாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு எதிராக ஈரான் மேற்கொண்ட நியாயமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக, அந்த நாட்டை அமெரிக்கா பொறுப்புக்கூற வைக்கிறது” என்று அமெரிக்க மத்திய கட்டளை மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, சிறிக், புஷேர், கொனாரக் மற்றும் சபாஹர் ஆகிய இடங்களில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும்அவற்றைத்தொடர்ந்து பிராந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணைப்பகுதியில் இரண்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவமே, தற்போதைய இந்த தாக்குதலுக்கான முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version