ஈரானுக்கு எதிரான அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு இராணுவ நடவடிக்கைகளின் தாக்கம், அமெரிக்க குடும்பங்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுகளை கணிசமாக உயர்த்தியுள்ளதாக ஆய்வென்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மூடீஸ் அனலிட்டிக்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் ஆரம்பமான இந்த மோதலுக்குப் பின்னர், எரிபொருள் மற்றும் விமானக் கட்டண உயர்வுகள் காரணமாக அமெரிக்கக் குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக 447.19 அமெரிக்க டொலர்கள் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த மூன்று மாதங்களில் அமெரிக்க நுகர்வோர் மொத்தமாக சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிகமாக செலவிட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
போர்ச் சூழல் தொடருமானால், நுகர்வோர் தங்களின் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிலை உருவாகும் என்றும், அது ஏற்கனவே அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மூடீஸ் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணரான Mark Zandi எச்சரித்துள்ளார்.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!