எரிபொருள் தாங்கிய நான்கு கப்பல்கள் ஏப்ரலில் இலங்கைக்கு!

நாட்டுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பை உறுதி செய்ய, நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்தின் நடுப் பகுதியில், நான்கு பிரதான எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த எரிபொருள் கப்பல்கள் அனைத்தும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரவுள்ளன.

அதற்கமைய, ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் முதலாவது கப்பலும், ஏப்ரல் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் இரண்டாவது கப்பலும்,ஏப்ரல் 21மற்றும் 22 ஆம் திகதிகளில் மூன்றாவது கப்பலும், ஏப்ரல் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நான்காவது கப்பலும் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த எரிபொருட்கள், கப்பல்களில் இருந்து இறக்கப்படும் தருணத்தில் உலக சந்தையில் நிலவும் சந்தை விலைக்கு ஏற்பவே கொள்வனவு செய்யப்படும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஏ.ராஜகருணா சுட்டிக்காட்டினார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version