நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை இன்று (15) முதல் அமுலுக்கு வந்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தை சீரமைத்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த QR முறைமை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதோடு, முறைகேடுகள் மற்றும் அத்துமீறிய கையிருப்புகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை பதிவு செய்து பெற்ற QR குறியீட்டை பயன்படுத்தி மட்டுமே எரிபொருளை பெற முடியும்.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் இந்த முறைமையை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் தங்களது வாகனங்களுக்கு உரிய QR பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளுமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!