ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2016 ஆம் ஆண்டு கொழும்பில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான தொடுக்கப்பட்ட வழக்கு செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் இன்று (13) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சாட்சி விசாரணைகளை செப்டம்பர் மாதத்தில் முன்னெடுக்க மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையில், அவர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி மருத்துவ அறிக்கையையொன்றைச் சமர்ப்பித்திருந்தார்.
இந்த நிலையில் மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக குறித்த வழக்கு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!