ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நேற்று (08) நடைபெற்றது.


அந்தப்போட்டியில், முதலில் துடுப்படுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, 47 ஓவரில் 8 விக்கட்டுகளை இழந்து 299 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய அயர்லாந்து அணி 33.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இந்த போட்டியில் 6 விக்கெட்களை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் புதிய சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக 2017 ஆம் ஆண்டிலும், இதே அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 7 விக்கெட்களை ரஷீத் கான் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய அணி!
உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!