கிழக்கு பல்கலைக்கழக மாணவி விடுதியில் தற்கொலை!

கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி மாணவி ஒருவர் தவாறான முடிவெடுத்து விடுதியில் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (19) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது.

திருக்கோவில், தம்பிலுவிலைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லூரியில் நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக கற்கைநெறியில் ஈடுபட்டுவந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version