முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்டோர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று (27) தீர்ப்பளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில், இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து நடைமுறைக்கு முரணாக சுகாதார பொருட்களை கொள்வனவு செய்ததன் மூலம், அவர்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்குவெல, அரசுக்கு தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 7.5 கோடி ரூபாவைச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தா, முன்னாள் தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகாரி பேராசிரியர் எஸ்.டி. ஜெயரத்தினே,
டாக்டர் விஜித் குணசேகர, மற்றும் டாக்டர் துசிதா சுதர்சன ஆகியோர் தலா 5 கோடி ரூபா செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!