யாழ்.சாவகச்சேரி மறவன்புலவு பிரதேத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து ஏற்றிச் சென்ற உழவு இயத்திரத்தை பொலிஸார் விரட்டிப் பிடித்துள்ளனர்.
மறவன்புலவுப் பிரதேசத்தில், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்றிரவு (04) 11.00 மணியளவில் பொலிஸார் அங்கு சென்றுள்ளனர்.



அங்கு பொலிஸாரின் அறிவுறுத்தலையும் பொருட்படுத்தாது உழவு இயந்திரத்தை வேகமாக ஓட்டிச் சென்றதோடு,பொலிஸாருக்கு தடையை ஏற்படுத்தும் விதமாக மணலை கொட்டியவாறு உழவு இயந்திரத்தைச் செலுத்தியுள்ளனர்.
இறுதியாக உழவு இயந்திரத்தை பற்றைக்குள் விட்டுவிட்டு அதில் பயணித்த ஐவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தநிலையில் உழவு இயந்திரத்தை கைப்பற்றிய பொலிஸார், தப்பியோடியவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!