இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தில், வடக்கு கிழக்கில் போராட்டங்கள் இன்று(04) முன்னெடுக்கப்பட்டன.

வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில், கிளிநொச்சி – கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் ஏ 9 வீதியூடாகப் பயணித்து டிப்போ சந்தியிலுள்ள பசுமைப் பூங்காவில் நிறைவடைந்தது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புகள்,காணாமல் போனவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!