சுற்றுலாப் பயணிகளுடன் மீண்டும் திரும்பிய கார்டெலியா குரூஸ் கப்பல்!

இந்தியாவின் மும்பையிலிருந்து இலங்கைக்கு வந்த கார்டெலியா குரூஸ் (Cordelia Cruises) சுற்றுலாப் பயணிகள் கப்பல் தனது பயணத்தை நிறைவு செய்துகொண்டு மீண்டும் இன்று(21) தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

கார்டெலியா குரூஸ் சுற்றுலாப் பயணிகள் கப்பல் 12 ஆம் திகதி மும்பாயிலிருந்து 862 சுற்றுலாப் பயணிகளுடன் தனது பயணத்தை ஆரம்பித்து யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை 14 ஆம் திகதி வந்தடைந்தது.

கப்பலில் லண்டன், இந்தியா, ஜேர்மனி, மொரீஷியஸ், அமெரிக்கா மற்றும் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து இருந்தனர்.

யாழ்ப்பாணத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களை பார்வையிட்ட பின்னர், அவர்கள் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்குத் திரும்பி, கப்பல் மூலம் சென்னை நோக்கி பயணித்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version