யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி ஆம்பப் பிரிவு மணவர்களின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் துறனாய்வு நிகழ்வு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று(19) பிற்பகலில் இடம்பெற்றது.


கல்லூரி அதிபர் ஏ.பீ. திருமகன் அடிகளார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.


நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவனும், 1976 ஆம் ஆண்டு மாணவத் தலைவனும், கிரிக்கெட் அணியின் தலைவரும், தற்போது லண்டன் MCC கிரிக்கெட்டின் மத்தியஸ்தருமான அன்ரன் சவரிமுத்து விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.


நிகழ்வில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன.


இந்த மெய்வல்லுநர் திறனாய்வில் 93 புள்ளிகளுடன் மத்தியூஸ் இல்லம் முதலிடத்தையும், 79 புள்ளிகளுடன் பொஞ்சீன் இல்லம் இரண்டாம் இடத்தையும், 75.5 புள்ளிகளுடன் லோங் இல்லம் மூன்றாம் இடத்தையும் 65.5 புள்ளிகளுடன் டண் இல்லம் நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!