செம்மணியில் இன்று அடையாளம் காணப்பட்ட 14 என்புக்கூடுகள்!

யாழ்.செம்மணி புதைகுழியிலிருந்து 14 என்புக்கூடுகள் இன்று(17) அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் குழந்தை ஒன்றினதும், சிறுவர் ஒருவரினதும் அடங்கலாக 05 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 27ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது.

என்புக்கூடொன்றின் இடுப்பு பகுதியிலிருந்து ஓர் இரும்பு வளையம் ஒன்று சான்று பொருளாக மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன், சிறுமி ஒருவருடைய பிளாஸ்ரிக் காப்பை ஒத்த பொருள் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் இது வரையிலான அகழ்வு பணிகளின் போது, 380 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் 362 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version