யாழ்.செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று(07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



இதன்போது செம்மணி சிந்து பாத்தி மனிதப் புதை குழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு யாழ்ப்பாண நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிடுவதற்கான அனுமதி கோரப்பட்ட நிலையில், அந்த அனுமதி இன்று வழங்கப்பட்டது.
இருந்தபோதிலும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிடச் செல்லும் தினம் தொடர்பாக நீதிமன்றுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதவான் அறிவுறுத்தினார்.
அதனை அடுத்து அகழ்வுப்பணியை ஆரம்பிக்கும் திகதி தொடர்பாக தீர்மானிப்பதற்காக, எதிர்வரும் 21 ஆம் திகதி வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!