சொல்லிசை கலைஞர் க.சங்கீத்சனின் பிணை மனு மீதான கட்டளை எதிர்வரும் 23 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ். மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் குறித்த பிணை மனு இன்று (11) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டதாக சங்கீத்சன் சார்பாக மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள க.சங்கீத்சனுக்கு பிணை வழங்குமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளைகள் தொடர்பிலும், சங்கீத்சன் சார்பாக மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு, நாளை அல்லது எதிர்வரும் 15 அல்லது 16 ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் எனவும் சங்கீத்சனின் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!