இந்திய கலாசார உறவுக் குழுவின் (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (05) முற்பகல் புதுடில்லி நோக்கிப் புறப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தில் புதுடில்லிக்கு மேலதிகமாக குஜராத் மற்றும் கேரளா மாநிலத்திற்கும் அவர்கள் பயணித்து அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களோடு கலந்துரையாடவுள்ளனர்.
மேலும், இந்தியாவின் விவசாய, தொழில் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உரித்தான மத்திய நிலையத்தையும் குழுவினர் பார்வையிடவுள்ளனர்.
இந்த விஜயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ஜானக அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், கருணைநாதன் இளங்குமரன், மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு பிரதிநிதி ஹேமதிலக கமகே மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுஷானீ ஆகியோர் அடங்குகின்றனர்.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!