இலங்கையிலுள்ள ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து, பொதுவான விவகாரங்களில் கூட்டாகச் செயற்படுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, கொழும்பிலுள்ள தனியார் விடுதியில் நேற்று(12) இடம்பெற்றுள்ளது.


அரசாங்கத்தின் குறைகளையும், நிறைகளையும் மக்கள் மத்தியில் வெளிப்படையாகவும், கூட்டாகவும் முன்வைப்பதற்கான மேடையொன்றை உருவாக்குவதே இந்த உடன்படிக்கையின் நோக்கம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அரசாங்கத்திற்கு முறையான அழுத்தங்களை வழங்க இந்த கூட்டு அரசியல் முயற்சி மிகவும் அவசியமானதெனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் பங்கேற்றுள்ளன.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!