தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

யாழ்தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம், தெல்லிப்பழை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (15) இடம்பெற்றது.

பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில்,

நாடாளுமன்ற உறுப்பினர்களான அருச்சுனா இராமநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன்,பிரதேச சபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள்  என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது வலி வடக்கு காணி விடுவிப்பு, கழிவகற்றல் மற்றும் கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஆகிய விடயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version