நுவரெலியா மாவட்ட நீர்தேங்கங்களின் நீர் மட்டங்கள் உயர்வு: தாழ் நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!

நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் காற்றோடு கூடிய கனமழை காரணமாக நீர்தேக்கங்களில் நீர் மட்டங்கள் வெகுவாக உயர்ந்துள்ளன.

அந்தவகையில், மவுசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. மேலும் கென்யோன் நீர்தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டியுள்ளது.

அதேபோல் லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல, காசல்ரீ ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்கள் வெகுவாக உயர்ந்து வருகிறன.

விமல் சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் நிரம்பிய நிலையில் தற்போது வான் பாய்கிறது.

தாழ் நிலப் பகுதியிலுள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்குமாறு நுவரொலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

நீர் வீழ்ச்சிகளில் அதிக நீர் வரத்து காணப்படுவதால், அங்கு சென்று நீராட வேண்டாம் என மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version