பெப்ரவரி அஸ்வெசும உதவி வங்கிகளுக்கு அனுப்பி வைப்பு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாத கொடுப்பனவுகள்
வங்கிக் கணக்குகளில் இன்று(12) வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில் குறித்த திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்குமான பெப்ரவரி மாதத்திற்குரிய நிதி ஒதுக்கீடுகள் விடுவிக்கப்பட்டு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதால் பயனாளிகள் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், வறிய மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், முதியோர், இயலாமை உள்ளவர்கள் போன்றோருக்கு மாதாந்த கொடுப்பனவாக அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version