நாட்டில் நிலவும் பலத்த மழையால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பொல்கொல்ல மகாவலி அணையின் இரு வான் கதவுகள் இன்று (02) இரண்டு அடிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், வினாடிக்கு 3,940 கன அடி நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்படுவதாக பொல்கொல்ல மகாவலி அணைக்கட்டுப் பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மகாவலி கங்கையின் கீழ்நோக்கிய தாழ்நிலப் பகுதிகளிலும், விக்டோரியா நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்தோடு இருக்குமாறும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு மெகசினில் நேற்றிரவு பதற்றம்: நிலைமை கட்டுப்பாட்டுக்குள்!
தையிட்டி பவானி வீதி விவகார பொலிஸ் வழக்கைத் தள்ளுபடி செய்தது மல்லாகம் நீதிமன்றம்!
நல்லூரான் வடக்கு வாயில்அலங்கார தோரணை வளைவு திறந்து வைப்பு!
பல்கலைக்கழக மாணவர் பதிவு இன்று முதல்!