மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
சிறைச்சாலையில் நிலவிய அசாதாரண சூழ்நிலை கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கைதிகள் அனைவரும் மீண்டும் அவர்களது சிறை அறைகளுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இதன்போது காயமடைந்த 7 கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம்(01) ஏற்பட்டிருந்த அமைதியின்மையை அடுத்து சிறை வளாகம் சோதப்பட்டு, தீயூட்டப்பட்டுமிருந்தது.



அதனையடுத்து பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு இரவோடு இரவாக நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், மஹர சிறைச்சாலையில் தற்போது விளக்கமறியல் கைதிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் உட்பட 4100 ற்கும் மேற்பட்ட கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!