மஹர சிறைச்சாலை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
கெண்டலியத்த வீதி மேற்கு, கெண்டலியத்த வீதி வடக்கு, மற்றும் தம்புவ ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டமே தளர்த்தப்பட்டுள்ளது.
மஹர சிறைச்சாலையில் நேற்றைய தினம்(01) ஏற்பட்டிருந்த அமைதியின்மையை அடுத்து சிறை வளாகம் சோதப்பட்டு, தீயூட்டப்பட்டுமிருந்தது.
அதனையடுத்து குறித்த பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!