பாடசாலை சீருடைகள் விநியோகம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் கே.எம்.ஜீ.எஸ். நாலக களுவெவ இதனை தெரிவித்துள்ளார்.
இதற்காக நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், புதிய கல்வி சீர்திருத்தங்களின் படி, பாடசாலைகளில் முதலாம் கட்ட வகுப்புகள் 29 ஆம் திகதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி சீர்திருத்தங்களின்படி, முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு முறையான கற்பித்தல் நடவடிக்கை 21 ஆம் திகதி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!