மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மின்கம்பத்தோடு அம்பியூலன்ஸ் வண்டி மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
விபத்தில், அம்பியூலன்ஸ் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கி பயணித் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வண்டியே விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் கலந்துரையாடல்!
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய கனேடியர் கைது!
அமெரிக்காவின் 10 சதவீத வரிவிதிப்பை வரவேற்றுள்ள இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம்!
செம்மணி மனித புதைகுழியில் நேற்று 4 என்புக் கூடுகள் அடையாளம்!