சர்வதேச சந்தையில் பிரென்ட் மசகு எண்ணெய் விலையானது மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.
ஆசிய சந்தைகளில் இன்று (24) காலை நிலவரப்படி, மசகு எண்ணெய் விலை 3.75 சதவீதம் அதிகரித்து 103.69 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, நைமெக்ஸ் லைட் ஸ்வீட் மசகு எண்ணெய் விலை 3.42 சதவீதம் அதிகரித்து 91.55 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேநேரம் ஈரானிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இடை நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் பெரும் வீழ்ச்சியைக் கண்டிருந்தன.
டிரம்பின் அறிவிப்பை ஈரான் மறுத்ததை அடுத்து, இந்த உயர்வு மீண்டும் பதிவாகியுள்ளது.

யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!