இலங்கை, ஹொரணை படகொடா கல்பாதவிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காணாமல் போயுள்ளனர்.


இந்த தீ விபத்து நேற்று (03) மாலை ஏற்பட்டுள்ளது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், 72 பேர் முதியோர் இல்லத்தில் இருந்துள்ளனர்.
அவர்களில் 51 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும்,7 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போதும் முதியோர் இல்லம் பெருமளவு சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!