முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று(6) கைது செய்யப்பட்டார்.
300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
,இதேவேளை, கடந்த ஆண்டு 16 வங்கிக் கணக்குகளில் ரூ. 90 மில்லியனுக்கும் அதிகமான வைப்புத்தொகையை சந்தேகத்திற்கிடமான முறையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஏற்கனவே கெஹெலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் ஏனைய மகள்கள் மீதும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மூத்த மகளும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!