பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக, இதுவரை 7 மரணங்கள் பதிவாகியுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஏழு மரணங்களும் தற்போதைய கடுமையான வெப்பநிலையின் காரணமாகவே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர் மோட் ப்ரெகோன் (Maud Bregeon) தெரிவித்துள்ளார்.
கடுமையான வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக நீர்நிலைகள் மற்றும் கடலில் இறங்கிய போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய மரணங்கள் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றவர்களுக்கு இடையில் பதிவாகியுள்ளன.
பிரான்ஸ் வளிமண்டலவியல் திணைக்கள தரவுகளின்படி, மே மாதமொன்றில் வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த வெப்பநிலை நேற்று முன்தினம் (26) திங்கட்கிழமை பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: ஐவர் காயம்!
‘சூரிச்’ சிவன் ஆலயத்தால் இடம்பெற்ற தமிழகரன் சனாவின் ஆன்மிக சொற்பொழிவு!
சிரிய வாகன விபத்தில் 35 பேர் பலி: 30 பேர் காயம்!
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!