யாழில் சிறுமியிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிக்குவிற்கு சாவகச்சேரி நீதிமன்றம் விளக்கமறியல் நீடித்துள்ளது.
யாழ்.நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி, விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார்.


அதன்போது பௌத்த பிக்கு ஒருவர் அச்சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், குறித்த வழக்கு நேற்று (02) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரை எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!