யாழ்.மாவட்ட பொலிஸ் நிலையங்களின் ஏற்பாட்டில், வெசாக் பண்டிகை நிகழ்வும்,வெசாக் கூடாரக் காட்சியும், யாழ். தலைமை பொலிஸ் நிலைய மைதானத்தில் நேற்றிரவு (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்த நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்த்தன, யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன,யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.எஸ்.ஜெயமஹா, யாழ்.மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.ஈ.என்.தில்ருக், யாழ்.தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். பாலித செனவிரட்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


மேலும்,வெசாக் கூடாரங்களை இன்றும் பொதுமக்கள் பார்வையிட முடியும் என யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம். பாலித செனவிரட்ன தெரிவித்தார்.



22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!