யாழ்.செம்பியன்பற்று கடலில் காணாமல் போன மீனவர் பாதுகாப்பாக மீட்பு!

யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பகுதியிலிருந்து கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளார்.

மீனவர்கள் மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதலின் மூலம் கரையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றார் தொலைவில் குறித்த மீனவர் மீட்கப்பட்டுள்ளார்.

செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் நேற்று(7) இரவு வழமை போல் கடற்தொழிலுக்குச் சென்றுள்ளார்.

எனினும், நீண்ட நேரமாகியும் அவர் கரை திரும்வில்லை.

இதனைத் தொடர்ந்து, கடற்தொழிலாளர்களும், கடற்படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பல மணித்தியால தேடுதலின் பின்னர் கரையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version