யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறை தொடர்பான கள விஜயமும் கலந்துரையாடலும்!

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் ருவான் ரணசிங்க, சாட்டி மற்றும் பண்ணைக் கடற்கரைக்கு விஜயம் செய்து அவற்றின் அபிவிருத்தி தொடர்பாக இன்று(04) ஆராய்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து
யாழ்.மாவட்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக, ஹோட்டல் நிர்வாகத்தினருடனான கலந்துரையாடல், யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று நண்பகலில் (04) இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில்,
நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், எஸ். ஸ்ரீபவானந்தராஜா ஆகியோரும்,

வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் ஜெ.விவேகானந்தன், சுற்றுலாத்துறை அதிகாரிகள், ஹோட்டல்கள் உரிமையாளர்கள், நிர்வாகத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version