ரஷ்யாவின் எண்ணெய் கப்பலை கைப்பற்றியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
சர்வதேசத் தடைகளை மீறி மசகு எண்ணெய் ஏற்றிச் செல்லப்பட்டதாகலேயே அதனை கைப்பற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘டாகோர்’ என்ற எண்ணெய்க் கப்பலையே அட்லாண்டிக் பெருங்கடலில் வைத்து பிரான்ஸ் கடற்படையால் கைப்பற்றியுள்ளது.
பிரிட்டன் உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன், சர்வதேச கடல் எல்லையில் சட்டபூர்வமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத் தடைகளை மீறி மேற்கொள்ளப்படும் எண்ணெய் போக்குவரத்து, நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போருக்கு நிதி மூலமாகவும்,
கடல் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும், அச்சுறுத்தலாகவும் இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப்பேச அமெரிக்காவிற்கு அருகதை இல்லை: ஈரானிய துணை ஜனாதிபதி சீற்றம்!
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!