வலுசக்தி அமைச்சராக அனுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் இந்த நியமனம் நேற்று(20) வழங்கப்பட்டுள்ளது.
வலுசக்தி அமைச்சு பதவிக்கு மேலதிகமாக அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார்.
நிலக்கரி கெள்வனவில் முறைகேடு இடம்பெற்றதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டிவரும் நிலையில், ஜனாதிபதி ஆணைக்குழு அதனை விசாரணை செய்துவருகிறது.
அந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, கடந்த வெள்ளுக்கிழமை பதவி விலகியிருந்தார்.
அதனையடுத்து வலுசக்தி அமைச்சுக்கு புதிய அமைச்சராக அனுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!