வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று(27) காலையில் இடம்பெற்றுள்ளது.
மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும், மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்து ஜீப் ரக வாகனமும் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!