அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதி – வீரவில பகுதியில் இரு அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பம் இன்று (18) முற்பகலில் இடம்பெற்றுள்ளதாக வீரவில பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதோடு33 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை வைத்துயசாலையிலும், தெபரவாவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பேருந்துமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!