வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பரந்தன் – பூநகரி வீதியில் குறித்த விபத்து இன்று(22) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்துள்ளது.
விபத்திற்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!