கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டதாகக் வழக்கில், முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, முன்னாள் கடற்படைத் தளபதியை எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 11 இளைஞர்கள் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையதாகும்.
வழக்கின் மேலதிக விசாரணைகளின் தொடர்ச்சியாகவே இந்த நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!