ICC ஒருநாள் தரவரிசையில் ஒரே ஒரு புள்ளியால் முதலிடத்தை தவறவிட்ட சுப்மன் கில்!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், நியூசிலாந்தின் டேரல் மிட்செல் 802 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.

இந்தியாவின் இளம் நட்சத்திரம் சுப்மன் கில் 801 புள்ளிகளுடன், வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா முறையே 3 மற்றும் 4ஆம் இடங்களிலும், ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஸத்ரான் 5ஆம் இடத்திலும் தொடர்கின்றனர்.

பாபர் அசாம் மற்றும் ஹாரி டெக்டர் தலா ஒரு இடம் முன்னேறி 6 மற்றும் 7ஆம் இடங்களைப் பெற்றுள்ளதுடன், ஜோ ரூட் 4 இடங்கள் முன்னேறி மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அணியின் சரித் அசலங்க ஒரு இடம் பின்னடைவைச் சந்தித்து 659 புள்ளிகளுடன் 10ஆம் இடத்தில் உள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version